தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!
04:17 PM Nov 05, 2025 IST | Ramamoorthy S
தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பை உத்தராகண்ட் சட்டமன்றம் அங்கீகரித்துள்ளது.
உத்தராகண்ட் சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உரையாற்றினார்.
Advertisement
அப்போது பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறாண்டு கால பயணம் நாடு முழுவதும் தேசிய உணர்வின் சுடரை ஏற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். கலாச்சார மறுமலர்ச்சி, சமூக நல்லிணக்கம், தேசபக்திக்கு ஆர்எஸ்எஸ் வித்திட்டதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
மேலும் தேவபூமியான உத்தராகண்ட், 25 ஆண்டு கால பயணத்தில், பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். மக்களின் ஒத்துழைப்புடன், உத்தராகண்டை நாட்டின் சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான உறுதியை கொண்டுள்ளதாகவும் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
Advertisement
Advertisement