For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

98 % 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது - ரிசர்வ் வங்கி தகவல்!

10:46 AM Jan 02, 2025 IST | Murugesan M
98   2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது   ரிசர்வ் வங்கி தகவல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் திரும்ப பெறப்பட்டு விட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன. 2023ஆம் ஆண்டு அவை அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி 98 புள்ளி 12 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும், 6 ஆயிரத்து 691 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளுக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement