செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

All of us will miss you Rafa - அண்ணாமலை வாழ்த்து!

11:08 AM Nov 22, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரபேல் நடாலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால்.  களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

இந்த நிலையில் டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் மோதின. நடால் நெதர்லாந்தை சேர்ந்த போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்ப்-ஐ எதிர்கொண்டார்.

Advertisement

இதில் 4-6, 4-6 என நடால் தோல்வியடைந்தார். இதனால் தோல்வியுடன் அவருடைய 23 வருட டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற ரபேல் நடாலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். நடாலின் திறமை, கடின உழைப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர் all of us will miss you என கூறியுள்ளார்.

 

Advertisement
Tags :
annamalai greetingsFEATUREDMAINRafael Nadalspain
Advertisement