For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

Bad girl தணிக்கை சான்று பரீசிலிக்கப்படும் : சென்சார் போர்டு

06:23 PM Feb 27, 2025 IST | Murugesan M
bad girl தணிக்கை சான்று பரீசிலிக்கப்படும்   சென்சார் போர்டு

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

அதில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படத்தின் டீசரில், பிராமண சமுதாயம் மற்றும் பிராமண பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த டீசரை வைத்து சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் பிராமண சமூகம் குறித்து தரம் தாழ்ந்து பேசப்பட்டு வருவதாகவும், பிராமண மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

மேலும் bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, bad girl என்ற பெயரில் சென்சார் சான்று வழங்க அனுமதி கோரி இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என தணிக்கை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், bad girl திரைப்படம் தொடர்பாக மனுதாரர் சென்சார் போர்டுக்கு அளித்த மனு சட்டப்படி பரிசீலிக்கப் படும் என தணிக்கை குழு தரப்பில் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
Advertisement