DOGE அமைப்பில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவிப்பு!
11:56 AM Jan 21, 2025 IST | Murugesan M
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், DOGE அமைப்பில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தும் முக்கிய அமைப்பான DOGE, தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் இயங்கி வந்தது.
Advertisement
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நிலையில், DOGE அமைப்பில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
Advertisement
DOGE அமைப்பை ஆதரிப்பதில் தான் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் எலான் மஸ்க் மற்றும் குழுவினர் சிறப்பாக செயல்படுவர் என்று நம்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அதிபர் டொனாஸ்டு ட்ரம்புக்கு உதவ தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement