I PHONE 16 PRO செல்போனில் TOUCH SCREEN சரி இல்லையா? வல்லுநர்கள் கருத்து என்ன? சிறப்பு கட்டுரை!
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட I PHONE 16 PRO செல்போனின் TOUCH SCREEN சரியாக வேலை செய்யவில்லை என பயனர்கள் புகார் கூறியுள்ளனர். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
Advertisement
I PHONE... செல்போன் என்பதையும் தாண்டி பெருமையின் அடையாளமாக கருதப்படும் பொருள். இன்று SMART PHONE விற்பனையில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் APPLE-க்கும் அதன் தயாரிப்பான I PHONE-க்கும் தனி இடமுண்டு.
புதிய மாடல்களை APPLE அறிமுகப்படுத்தும் போது PRE BOOKING செய்துவிட்டு வரிசையில் நின்று வாங்குவார்கள் வாடிக்கையாளர்கள்..அதுபோன்ற ஒரு வரவேற்பு அண்மையில் APPLE அறிமுகப்படுத்திய I PHONE 16 SERIES-க்கும் கிடைத்தது.
I PHONE 16, I PHONE 16 PLUS, I PHONE 16 PRO, I PHONE 16 PRO MAX ஆகிய 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 128 GB STORAGE முதல் 1 TB STORAGE வரை 4 VARIANT-களில் வெளியிடப்பட்டது I PHONE 16 SERIES. 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை மாடலுக்கும் STORAGE-க்கும் ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
வழக்கம் போல் வந்த உடனேயே MARKET-ஐ கலக்கியது I PHONE 16 SERIES. பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியானதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கத் தொடங்கினர்.
இப்படி எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில், "வாங்காதீங்க... I PHONE 16 PRO-வ வாங்காதீங்க..." என கதற தொடங்கியிருக்கிறார்கள் ஏற்கனவே அந்த மாடலை வாங்கிய பயனர்கள். I PHONE 16 PRO-வில் TOUCH SCREEN சரியாக வேலை செய்யவில்லை என்று புலம்புகிறார்கள் அவர்கள். TAP, SWIPE, SCROLL என எந்த ACTION-ம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்கிறார்கள்.
இது HARDWARE பிரச்னையல்ல என்றும் SOFTWARE-ஆல் ஏற்பட்டுள்ள சிக்கல்தான் என்றும் கூறப்படுகிறது. அதாவது IOS TOUCH REJECTION ALGORITHM-மே TOUCH SCREEN ஒழுங்காக வேலை செய்யாததற்கு காரணம் என்கிறார்கள் TECH வல்லுநர்கள்.
I PHONE 16 PRO-வில் மட்டுமின்றி I PHONE 15 PRO-விலும் இந்தப் பிரச்னை இருப்பதாக தெரிகிறது. பழைய OS-ஐ UPDATE செய்து IOS 18-க்கு மாறியவர்களும் இதே இன்னலை சந்தித்து வருகின்றனர்.
I PHONE-ல் இருக்கும் இந்த TOUCH பிரச்னை குறித்து பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விரைவில் இந்த சிக்கலை APPLE தீர்த்து வைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.