INDUS IND வங்கி நிதிநிலை சீராக உள்ளது - ஆர்.பி.ஐ விளக்கம்!
07:09 PM Mar 15, 2025 IST | Murugesan M
இண்டஸ் இண்ட் (INDUS IND) வங்கியின் நிதிநிலை சீராக இருப்பதாக ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
அண்மையில் 27 சதவீதமாக இருந்த இண்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இந்நிலையில், அந்த வங்கியின் நிதிநிலை கேள்விக்குறியாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவின.
Advertisement
இந்நிலையில், ஊகங்களின் அடிப்படையில் வெளியாகும் தகவல்கள் பற்றி வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இண்டஸ் இண்ட் வங்கியின் நிதிநிலை குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement