For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

SIM CARD இல்லாமல் CELLPHONE பேசலாம் : BSNL அதிரடி - சிறப்பு கட்டுரை!

07:00 PM Nov 15, 2024 IST | Murugesan M
sim card இல்லாமல் cellphone பேசலாம்   bsnl அதிரடி   சிறப்பு கட்டுரை

SIM CARD-ஏ இல்லாமல் செல்போன் பேசும் தொழில்நுட்பத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. அது எப்படி? என பார்க்கலாம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் சேவை இந்தியாவில் வளரத் தொடங்கிய காலத்தில் SIGNAL நன்றாக கிடைக்க வேண்டும் என்றால் மொட்டைமாடி போன்ற உயரமான இடத்துக்கு MOBILE-ஐ கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

Advertisement

எதிர்முனையில் பேசுபவரின் குரல் தெளிவாக கேட்காததால், "ஹலோ... ஹலோ... TOWER இல்ல... சரியா கேக்கல... ஒரு நிமிஷம் இருங்க வீட்ட விட்டு வெளில வர்றேன்" என்று கூறியபடி வாசலுக்கு வரவேண்டியிருக்கும்.

நகரங்களிலேயே இந்த நிலைமை என்றால் கிராமப்புறங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பேசுவதற்கே இப்படியெனில் இணையத்தை பயன்படுத்த என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை 5G சேவையில் 5TH GEAR போட்டு TOP SPEED-ல் INTERNET-ஐ உபயோகிக்கும் INSTA KIDS-களால் புரிந்து கொள்ள முடியாது.

Advertisement

அப்போதும் சரி... இப்போதும் சரி... REMOTE AREAS என்று சொல்லப்படும் குக்கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதில் முன்னணியில் இருப்பது BSNL நிறுவனம்தான். தனியார் கம்பெனிகளுடன் ஒப்பிடுகையில் சில குறைபாடுகள் இருந்தாலும் லாப நோக்கத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்களை மனதில் வைத்து சேவையை வழங்கும் நிறுவனம் BSNL என்பதை அனைவரும் ஏற்பார்கள்.

LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன் என்பதைப் போல் இந்தியாவிலேயே முதன்முறையாக D2D எனப்படும் DIRECT TO DEVICE சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது BSNL.

"ஒரு லக்னத்தில் 9 கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் BATTERY இல்லாமலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்" என்றொரு சினிமா வசனம் உண்டு. ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தாலும் BSNL-ன் DIRECT TO DEVICE சேவையைப் பயன்படுத்தி SIM CARD-ஏ இல்லாமல் செல்போன் பேச முடியும்.

அதாவது TOWER, CABLE, WIFI போன்ற இணைப்புகள் ஏதுமின்றி நேரடியாக செயற்கைக்கோள் மூலம் செல்போனில் இருந்து அவசரகால அழைப்புகளை மேற்கொள்ளவும், MESSAGE அனுப்பவும், UPI மூலம் பணம் அனுப்பவும் DIRECT TO DEVICE சேவை வழிசெய்கிறது.

CALIFORNIA-வைச் சேர்ந்த VIASAT என்ற நிறுவனத்துடன் இணைந்து D2D சேவையை வழங்குகிறது BSNL. இதன்மூலம் குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்குதடையின்றி அவசரகால தொலைத்தொடர்பு சேவையைப் பெற முடியும்.

எனினும் D2D மூலம் சாதாரண அழைப்புகளை மேற்கொள்ள முடியுமா எனத்தெரியவில்லை. அதேபோல் இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது?, இதற்கென தனிக் கட்டணங்கள் உண்டா? என்பது போன்ற விவரங்களும் வெளியாகவில்லை.

இதுவரை அரசாங்கமும் ராணுவமும் மட்டுமே பயன்படுத்தி வந்த DIRECT TO DEVICE சேவையை முதன்முறையாக மக்களிடம் கொண்டு வந்திருக்கிறது BSNL. அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. D2D மூலம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வலுவான போட்டியாளராக மாறியிருக்கிறது BSNL..

Advertisement
Tags :
Advertisement