"SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? : எடப்பாடி பழனிசாமி கேள்வி!
திமுக ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்குப் பாதுகாப்பு இல்லை என்பது திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.
காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டனரா என்பதைத் தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள இபிஎஸ், திமுக ஆட்சியில் Out Of Controlஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரியச் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும், கைதான காவலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.