For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

TCCL கேபிளில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

01:16 PM Jan 13, 2025 IST | Murugesan M
tccl கேபிளில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி

நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியை TATA PLAY, GTPL, JIO TV-யை தொடர்ந்து, TCCL கேபிள் நெட்வொர்க்கில் சேனல் எண் 59 இல் இனி காணலாம்.

தமிழக மக்களுக்கு நேர்மையான செய்திகளை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சி, ஊடக உலகில் காலடி எடுத்து வைத்து குறுகிய காலமே ஆகின்றது.

Advertisement

செய்திகளை தாமதமின்றியும், நேரலையாகவும், உடனுக்குடன் வழங்கி வரும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி, மழை, வெள்ளம் பாதிப்பு, அரசியல் நிகழ்வுகள் மற்றும் மக்களின் அன்றாட பிரச்சனைகளை சரியான கோணத்தில் செய்தியாக வழங்கி மக்களின் மனதை வென்றுள்ளது.

அரசியல், ஆன்மீகம், அறிவியல், சினிமா மற்றும் விளையாட்டு என பல்சுவை செய்திகளை வழங்கி வருவதால் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisement

தற்போது பல்வேறு தளங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும் நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சி சென்னை JAK கம்யூனிகேஷன்ஸ் கேபிளில் சேனல் எண் 49 லும், TATA PLAY-ல் சேனல் எண் 1570-லும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அதேபோல் GTPL கேபிளில் சேனல் எண் 84லும், JIO TV-ல் சேனல் எண் 2023 லும் ஒளிபரப்பு செய்யப்படும் தமிழ் ஜனம் தொலைக்காட்சியை இனி TCCL கேபிள் நெட்வொர்க்கில் சேனல் எண் 59லும் நேயர்கள் காணலாம்.

Advertisement
Tags :
Advertisement