Unsafe Model அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல் முதலமைச்சர் ஸ்டாலின் வலம் வருவது விந்தையாக உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என Unsafe Model அரசை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்துவதாக இபிஎஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், ஆட்சி நடத்துவதில் உள்ளதா என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞர்கள் கொலைக்கான காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள இபிஎஸ், விளம்பரம் செய்வதில் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளார்.