For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது - மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

09:54 AM Jun 12, 2025 IST | Ramamoorthy S
upi பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது   மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தவறானது என்றும், அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் வணிக கணக்குகளுக்கும் பரிவர்த்தனை கட்டணம் (MDR) எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

சமீபத்தில் சில ஊடகங்களில் வெளியான செய்திகளில், ₹2,000 அல்லது ₹3,000க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு charges வரலாம் என கூறப்பட்டிருந்தது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த தகவல் உண்மையல்ல என்று அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

UPI பரிவர்த்தனை முறையில் எந்தவிதமான கட்டணமும் இன்றைய நிலவரப்படி விதிக்கப்படவில்லை என்றும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசின் திட்டம் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

NPCI (நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) தரவுகளின்படி, மாதத்திற்கு 100 கோடிக்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கட்டணமில்லாத முறையே இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Advertisement