செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

X என்னும் புதிய வைரஸ்

01:24 PM Sep 27, 2023 IST | Abinaya Ganesan

கொரோன வைரஸின் தாக்கம் உலக நாடுகளையே உலுக்கியது. அந்த பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக மீடேறி வரும் நிலையில் தற்போது கொரோனவிற்கு அடுத்தப்படியாக x என்னும் வைரஸ் பரவவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Advertisement

கொரோன வைரஸ் சீனாவின் வுஹான் பகுதியில் முதல்முதலில் கண்டறியபட்டது. 2019- ஆண்டு கண்டறியப்பட்டதால் இதற்கு கோவிட் -19 என்று பெயரிடப்பட்டது. இருப்பினும் 2020-ஆம் ஆண்டில் இதன் தாக்கம் அதிகம் ஆனதால் 2020 முதல் 2021 வரை ஓர் ஆண்டுகாலமாக உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கிக்கிடந்தனர்.

முகக்கவசம் அணிந்தும் , தனிநபர் இடைவெளி பின்பற்றியும் தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்து வந்தனர். இதுவரை கிட்டத்தட்ட 6,958,499 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கொரோன பாதிப்பில் இருந்து படிப்படியாக மக்கள் மீடேறி வரும் நிலையில் தற்போது X என்னும் புதிய வைரஸ் வரவுள்ளதாக who தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலகளாவிய சுகாதார நிபுணர்கள் தற்போது ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர், இதுகுறித்து பேசிய பிரிட்டனின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டேம் கேட் பிங்காம், COVID-19 மிகவும் ஆபத்தானது அல்ல என்றும் அடுத்து வரப்போகும் இந்த X வைரஸ் குறைந்தது 50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தொற்றுநோய் கொரோனா வைரஸை விட 20 மடங்கு அதிகமான மக்களைக் கொல்லக்கூடும் என்றும் COVID-19 தொற்றுநோய் 2020 இல் தொடங்கியதிலிருந்து, உலகளவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இறந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதனை எப்படி தடுக்க வேண்டும் ?

Advertisement
Tags :
coroanacovid-19MAINnewviruswhoXvirus
Advertisement
Next Article