ஃபெஞ்சல் புயல் - புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை!
05:42 PM Nov 30, 2024 IST | Murugesan M
புதுச்சேரியில் கடந்த 6 மணி நேரமாக காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் இ.சி.ஆர் சாலை, காந்தி வீதி, புஸ்சி வீதி, ஆகிய பிரதான சாலைகளிலும் , ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், உள்ளிட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
Advertisement
மேலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினார். . ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement