NISAR செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - நாசா அறிவிப்பு!
இந்திய - அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாகும் விலை உயர்ந்த NISAR செயற்கைக்கோள் 2025 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது.
இந்தியாவில் இஸ்ரோ நிறுவனமும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து புவி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிசார் செயற்கைக்கோளை உருவாக்க முடிவு செய்தது. உலகின் அதிநவீன மற்றும் விலை உயர்ந்த செயற்கைக்கோளாக நிசார் உருவாகியுள்ளது.
இதனை இந்த ஆண்டு விண்ணில் ஏவ முயற்சிகள் நடைபெற்றுவந்த நிலையில், தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நிசார் செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2 புள்ளி 8 டன் எடைகொண்ட இந்த செயற்கைக்கோள், நிலம் மற்றும் பனியால் மூடப்பட்ட மேற்பரப்புகளின் இயக்கத்தை ஒவ்வொரு 12 நாட்களுக்கும் அளவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலில் நிலவும் மாற்றங்கள் குறித்து ஆராயும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.