அடிலெய்டு டெஸ்ட் - ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
அடிலெய்டில் நடைபெற்ற இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன்-இன் அபார ஆட்டத்தால் 337 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து 175 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மினஸ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து 19 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 3.2 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. மேலும், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.