செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்கள்!

03:41 PM Nov 27, 2024 IST | Murugesan M

இந்திய நிலக்கரி நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்களை உருவாக்கத்  திட்டமிட்டுள்ளது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி  தெரிவித்துள்ளார்.

Advertisement

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிஅளித்த பதிலில்,

சிங்கரேனி நிலக்கரி சுரங்க நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 புதிய நிலக்கரி சுரங்கங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல் ) 2 புதிய நிலக்கரி சுரங்கங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

Advertisement

நிலக்கரி அமைச்சகம் மொத்தம் 175 நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இவற்றில் 65 நிலக்கரி தொகுதிகள் சுரங்க அனுமதிகளைப் பெற்றுள்ளன. அவற்றில் 54 தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலக்கரி சுரங்கங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் அமைந்துள்ளன.

சுரங்கப்பணிகளுக்கு முன்னரும், பின்னரும், ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்களை குறைப்பதற்காக, ஒவ்வொரு திட்டத்திற்கும் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில்,  சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்  தயாரிக்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு திட்டத்தை ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது.

2006-ம் ஆண்டு அறிவிப்பின்படி, விசாரணைகள் உட்பட பொது ஆலோசனையும் சுற்றுச்சூழல் சான்றிதழ் நடைமுறையின் ஒரு பகுதியாகும். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்போது குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் தணிவிப்பு நடவடிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் விதிக்கிறது.

அவை பல கட்டங்களாக அமல்படுத்தப்படுகின்றன. விதிமுறைகளின்படி இணக்கங்கள் முறையாக தெரிவிக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துதல், உடைமையாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அதற்கான இழப்பீடு நிறுவனத்தின் நடப்பிலுள்ள கொள்கையின்படி வழங்கப்படுகிறது. மேலும், நிலம் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், மாநில ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையும் கருத்தில் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
36 new coal projects in next 5 years!coalFEATUREDMAIN
Advertisement
Next Article