அண்டார்டிகா வின்சன் சிகரம் மீது ஏறிய முதல் தமிழ் பெண் - முத்தமிழ்ச்செல்வி சாதனை!
06:15 PM Dec 24, 2024 IST | Murugesan M
அண்டார்டிகாவில் உள்ள வின்சன் சிகரம் மீது ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையை வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. சிறுவயது முதலே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இவர், உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்தாண்டு ஏறி சாதனை படைத்தார்.
Advertisement
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான முத்தமிழ்ச் செல்வி, தற்போது அன்டார்டிகாவில் உள்ள வின்சன் சிகரம் மீதும் ஏறி புதிய சாதனையைப் படைத்துள்ளார். இயற்கையைக் காப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டு அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement