அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை! : தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை!
09:55 AM Dec 30, 2024 IST
|
Murugesan M
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளது.
Advertisement
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு ஏற்கனவே விசாரணையை தொடங்கிய நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவும் இன்று விசாரணையில் இறங்குகிறது.
Advertisement
இதற்காக இந்த குழுவினர் நேற்று இரவே சென்னை வந்தடைந்த நிலையில், விசாரணை முடிந்த பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Next Article