அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும்! - அண்ணாமலை
போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு, கைது நடவடிக்கை என்ற திமுக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக சகோதரிகள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாமலும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் செயல்படும் திமுக அரசைக் கண்டித்து, கண்களைக் கட்டிக் கொண்டு போராடும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழக பாஜக மகளிர் அணி சகோதரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு, கைது நடவடிக்கை என்ற திமுக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.