அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - சேலத்தில் ஏபிவிபி மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு, சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதை கண்டித்தும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி, சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், நீதி கேட்டு போராடிய ஏபிவிபி மாநிலச் செயலாளர் யுவராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமு, மாநகரச் செயலாளர் அருண், ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் சேலம் அரசு கலைக் கல்லூரியின் மாணவர் அமைப்பின் தலைவர் மனோஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.