For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு! : ஒருவர் பலி

08:10 PM Jan 14, 2025 IST | Murugesan M
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு     ஒருவர் பலி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு சிறந்த காளையருக்கு பரிசாக கார், சிறந்த காளைக்கு டிராக்டர் வழங்கப்பட்டது, மாடு குத்தியதில் வீரர் ஒருவர் பலி, 46 பேர் காயமடைந்தனர்

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 6:30 மணிக்கு தொடங்கியது போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடிய சேர்த்து துவங்கி வைத்தார்.

Advertisement

இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும் 900 மாடு பிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 895 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 37 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது மீதமுள்ள 858 மாடுகள் களம் கண்டது. இதேபோல் போட்டியில் பங்கேற்கும்வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மதுரை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.

Advertisement

இன்றைய போட்டியில் பங்கேற்க 629 வீரர்கள் வந்திருந்த நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் மது அருந்தியது, உடல் தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக 29 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 12 சுற்று நடத்துவதற்கு வசதியாக 600 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் நேரமின்மை காரணத்தால் 10 சுற்றுக்களோடு போட்டி நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 500 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர் மீதமுள்ள 100 வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் காலையிலிருந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.முதல் மாடுபிடி வீரர்கள் 21 பேர், நாட்டு உரிமையாளர்கள் 17 பேர்,பார்வையாளர்கள் ஆறு பேர்,காவலர் பத்திரிக்கையாளர் உட்பட இரண்டு பேர் என மொத்தம் 46 பேர் காயமடைந்தனர் பலத்த காயமடைந்த12 பேர் மேல்சிச்சுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 9வது சுற்றில் பங்கேற்ற மதுரை விளாங்குடியை சேர்ந்த நவீன் களத்தில் இருந்தபோது காளை மாடு நெஞ்சில் முட்டியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்த திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசான 8.50 மதிப்பிலான காரை தட்டிச் சென்றார். இவர் மொத்தமாக 19 காளைகளை பிடித்தார்.

Advertisement
Tags :
Advertisement