For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு - உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

02:50 PM Nov 24, 2024 IST | Murugesan M
அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு   உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு 2 ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளை பெற்றுள்ளதாக அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Advertisement

தங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அதானி குழுமம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில், ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேச நலனை கருத்தில் கொண்டு உடனடியாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement