For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதிகரிக்கும் வேலையின்மை : சீனாவில் ட்ரண்ட் ஆகும் IRON BUTT பயணங்கள் - சிறப்பு கட்டுரை!

07:00 PM Nov 14, 2024 IST | Murugesan M
அதிகரிக்கும் வேலையின்மை   சீனாவில் ட்ரண்ட் ஆகும் iron butt பயணங்கள்   சிறப்பு கட்டுரை

சீனாவில் IRON BUTT பயணம் என்ற புதிய டிரெண்ட் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைந்த வருமானம் காரணமாக, பணத்தை மிச்சப்படுத்த பலர் நீண்டதூர பேருந்து மற்றும் ரயில் பயணங்களைத் தேர்வு செய்கிறார்கள். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

IRON BUTT என்பது பேருந்து அல்லது ரயில்களில் அதிக நேரம் சோர்வடையாமல் அமர்ந்திருப்பவர்களை குறிக்கும் ஒரு வேடிக்கையான சொல்லாட்சியாகும்.

Advertisement

நிரந்தர வேலைவாய்ப்பின்மை சீனாவில் அதிகரித்து வருகிறது.வேலையில்லாத அல்லது குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்கும் சீன இளைஞர்கள் தங்கள் பயணத்துக்கு மலிவான வழிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதிகம் கட்டணத்தை கொண்ட விமான பயணங்களை தவிர்த்துவிட்டு, பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யும் போது, தாங்கள் கடந்து செல்லும் இடங்களைப் பார்த்து அதன் பாரம்பரியதையும்,வரலாறுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் சீன IRON BUTT இளைஞர்கள் உற்சாகமாக சொல்லி வருகின்றனர்.

Advertisement

பொதுவாக சில நேரங்களில் ரயில் அல்லது பேருந்து பயண நேரம், குறைந்த பட்சம் 50 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளன. அதனால், முதுகுவலி மற்றும் உடல் அசௌகரியம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

இந்நிலையில் தான், சீன சமூக ஊடகங்களில் #ironbutttravel என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டாகி உள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் சீன இளைஞர்கள் தங்களின் நீண்ட பேருந்து மற்றும் ரயில் பயணங்கள் பற்றிய சுவாரஸ்யமான கதைகளையும் படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

மாண்டரின் சீன மொழியில் "டைடிங்" என்று அழைக்கப்படும் இந்த போக்கு, அதன் #ironbutttravel ஹேஷ்டேக்குடன் இரண்டு கோடிகளுக்கும் மேலான கிளிக்குகளைப் பெற்றுள்ளது.

குறிப்பாக சீனாவில், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற மாநகரங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மலிவான பேருந்து மற்றும் ரயில் பயணங்களையே தேர்வு செய்கிறார்கள்.

கடந்த 10 மாதங்களில் 10 முறை இத்தகைய இரும்புப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக கூறும் 23 வயதான லின், பேருந்துகள் மற்றும் ரயில்களில் சுமார் 300 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் சின்ஜியாங்கில் இருந்து கஜகஸ்தானின் அஸ்தானாவுக்கு இடைவிடாமல், மொத்தம் 46 மணிநேரம் பேருந்தில் பயணம் செய்ததாக கூறியுள்ளார்.இந்த iron butt பயணத்தின் போது, உள்ளூர் உணவுகளைச் சுவைக்க முடிகிறது என்றும், புதிய புதிய நண்பர்களைப் பெற முடிகிறது என்றும் சீன இளைஞர்கள் கூறுகிறார்கள்.கொரொனா தொற்று நோய் முடிவுக்கு வந்தபின், உலகெங்கிலும் உள்ள ​​மக்கள் அதிக அளவில் சுற்றுலாவை நோக்கித் திரும்பினர்.

ஸ்லீப் டூரிசம் , டார்க் டூரிசம், ரிவென்ஜ் டூரிசம் என பல வகையான சுற்றுலா போக்குகள் உருவானது. இந்நிலையில், சீனாவில் உள்ள பல்கலை கழக பட்டதாரி இளைஞர்கள், IRON BUTT சுற்றுலாவை உருவாக்கி இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், Xinxin என்ற 25 வயதான சீன இளைஞர்,முதன்முறையாக IRON BUTT பயணி' என்று சீன சமூக ஊடகங்களில் வைரலானார். Xinxin ஓராண்டில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுமார் 42 நகரங்களுக்குப் பேருந்திலும் இரயிலிலும் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், சீனப் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 4.8 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு, சீனாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாகக் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சீன மக்களைச் செலவழிப்பதில் எச்சரிக்கையாக இருக்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. எனவே IRON BUTT பயணங்கள் சீனாவில் பிரபலமாகி வருகிறது.

Advertisement
Tags :
Advertisement