அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும், முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? - அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு கேள்வி!
டோக்கன் வாங்க அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? என அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பாக டிஜிபி, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது டோக்கன் வாங்க அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? என அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழப்பு எண்ணிக்கையைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.