அதிமுக போராட்டம் தொடரும்! - இபிஎஸ்
02:42 PM Dec 30, 2024 IST
|
Murugesan M
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினரை கைது செய்து காவல்துறை அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் திமுக அரசுக்கு கண்டனம் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட “அந்த சார் யார்?“ எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை அதிமுக போராட்டம் தொடரும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
Next Article