அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் நேற்று நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு சென்றார். அவ்ருக்கு பொன்னாடை அணிவித்து நயினார் நாகேந்திரன் வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் உரையாடினர்.
இதுதொடர்பாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள நைனார் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணியின் இல்ல திருமண விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக கூறி, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.