For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதிர்ச்சி தரும் ஆய்வு! : MICROWAVE OVEN-ல் 747 BACTERIA-கள்!

12:45 PM Aug 12, 2024 IST | Murugesan M
அதிர்ச்சி தரும் ஆய்வு    microwave oven ல் 747 bacteria கள்

MICROWAVE OVEN-ல் சமைப்பது பாதுகாப்பானது எனக்கூறப்படும் நிலையில் அதில் 747 BACTERIA-கள் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MIXIE, GRINDER, FRIDGE, INDUCTION STOVE ஆகியவற்றோடு அண்மைக்காலமாக MICROWAVE OVEN-ம் நம் வீட்டு சமயலறையில் இணைந்து கொண்டிருக்கிறது. முன்பு மேல்தட்டு மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த MICROWAVE OVEN தற்போது நடுத்தர மக்களையும் வந்தடைந்திருக்கிறது.

Advertisement

MICROWAVE எனப்படும் மின்காந்த அலைகள் மூலம்தான் OVEN செயல்படுகிறது. தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளி மற்றும் ஒலியை பரப்புவதற்காகவும், அலைபேசிகளில் தொலைத்தொடர்புக்காகவும் மின்காந்த அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

OVEN-ஐ பொறுத்தவரை அதில் உள்ள MAGNETRON என்ற TUBE-தான் MICRO அலைகளை உற்பத்தி செய்கிறது. அது உணவுப்பொருளில் இருக்கும் நீர்ச்சத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதனால் மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் போது வெப்பம் ஏற்பட்டு உணவு சமைக்கப்படுகிறது. அவ்வாறு நடைபெறும் போது உண்டாகும் வேதியியல் மாற்றங்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வு மூலம் MICROWAVE OVEN-ல் 747 BACTERIA இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. வீடு, அலுவலகம், சோதனைக்கூடம் என எங்கு MICROWAVE OVEN இருந்தாலும் அதோடு BACTERIA-களும் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் சில இனங்கள் OVEN உண்டாக்கும் அதிக வெப்பம், கதிர்வீச்சு உள்ளிட்டவற்றை சமாளிக்கும் திறன் பெற்றவையாம். மேலும் MICROWAVE OVEN-ல் கண்டயறிப்பட்ட KLEBSIELLA, ENTEROCOCCUS, AEROMONAS போன்ற BACTERIA-கள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி KLEBSIELLA BACTERIA நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. அதே போல் ENTEROCOCCUS BACTERIA சிறுநீர் பாதையில் தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறுகிறது மற்றொரு ஆய்வு.

எனவே பாதிப்பில் இருந்து தப்ப வேண்டுமென்றால் கிருமி நாசினி மூலம் MICROWAVE OVEN-ஐ அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Advertisement
Tags :
Advertisement