அப்பா பைத்தியசாமி சித்தர் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட மத்திய அமைச்சர்
புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி சித்தர் கோயிலில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழிபாடு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த 3 நாள் கருத்தரங்கின் நிறைவு விழா நடைபெற்றது.
இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டார். அப்போது கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு அர்ஜுன் ராம் மேக்வால் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக திலாஸ்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சாமி சித்தர் கோயிலுக்கு சென்ற அர்ஜூன் ராம் மேக்வால் அங்கு வழிபாடு மேற்கொண்டார். அப்போது பூஜை செய்து ஆரத்தி காட்டிய முதலமைச்சர் ரங்கசாமி, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை அவருக்கு பிரசாதமாக கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்ற அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.