'அமரன்' திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? - நாராயணன் திருப்பதி கேள்வி!
அமரன்' திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : அமரன்’ திரைப்படத்தை பார்த்து கண்கலங்கி நெகிழ்ச்சியோடு கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே, அந்தப் படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக திமுக வின் கூட்டணிக் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறுகிறாரே, சில அடிப்படைவாத இயக்கங்கள் கமல்ஹாசனின் வீட்டை முற்றுகையிடுகிறார்களே, அது குறித்து கருத்து தெரிவிப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமரன் படம் குறித்த தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேர்களேயானால்,
ஜவாஹிருல்லா மற்றும் இதர மத அடிப்படைவாத இயக்கங்களை கண்டிப்பீர்களா? மத உணர்வுகளை தூண்டும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? என்றும் முதலமைச்சருக்கு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.