அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன்!
அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "புகழ்பெற்ற கவிஞரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான பத்மஸ்ரீ சுகதகுமாரி அம்மாவின் ஆழ்ந்த பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், அமிர்தபுரி வளாகத்தில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் நடைபெற்ற சுகத நவதி 'ஒரு தாய் நடம்' (ஒரு மரக்கன்று நடும்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, பசுமை இந்தியாவின் எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடும் இயக்கத்திலும் நாங்கள் பங்கேற்றோம்.
இந்நிகழ்ச்சியில் மிசோராம் முன்னாள் ஆளுநர் kummanam Rajasekharan உள்ளிட்டோர் பங்கேற்றனர் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.