For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அமெரிக்காவில் கிரீன் கார்டு கிடைக்குமா? விவாதப்பொருளான இந்திய தொழிலதிபரின் கேள்வி? சிறப்பு கட்டுரை!

08:00 AM Dec 20, 2024 IST | Murugesan M
அமெரிக்காவில் கிரீன் கார்டு கிடைக்குமா  விவாதப்பொருளான இந்திய  தொழிலதிபரின் கேள்வி  சிறப்பு கட்டுரை

3 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், அமெரிக்க கிரீன் கார்டு கிடைக்குமா என்று தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் தலைவரான எலான் மஸ்க் அளித்த பதில், சமூக வலைத்தளங்களில் விவாதம் ஆகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வேகமாக வளர்ந்து வரும் கணினி உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தேடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதற்கு ஈடாக வளர்ந்து கொண்டேதான் வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் கூகுள் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.

Advertisement

கூகுள் நிறுவனத்தின் AI மற்றும் இணைய தேடல் திறன்களின் ஆற்றலையும் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு ஒரு சிறிய தேடல் தொழிற்நுட்ப START UP நிறுவனம் களமிறங்கியது. அது தான் ‘Perplexity AI’ .

இந்த புதிய நிறுவனத்தின் CEO ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பணிபுரிகிறார். OPEN AI மற்றும் META வின் OPEN SOURCE ஆன LAMA உள்ளிட்ட பல்வேறு பிரபல தேடல் தொழிற்நுட்பம் போலவே இந்த நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. சாதாரணமாக ஒரு நண்பருடன் உரையாடுவது போலவே இந்த தேடுபொறியுடன் உரையாடும் வசதி ‘Perplexity AI’ ல் அமைந்துள்ளது. இதன் காரணமாக இது ஒரு வலுவான ஆற்றல் மிகுந்த சக்தியாக உருவாகி வருகிறது.

Advertisement

இந்திய வம்சாவளியினரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தான் Perplexity AI-யின் இணை நிறுவனர் ஆவார். சென்னையில் உள்ள ஐஐடியில் பட்டம் பெற்ற அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தார். முன்னதாக கூகுள் மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டு தான் Perplexity AI என்ற புதிய தொழில்நுட்ப புரட்சியை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் உருவாக்கி வருகிறார்.

இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள Perplexity AI, எதிர்காலத்தில் இந்தியா சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது என்று Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், நீண்ட காலமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனினும், அவருக்கு இன்னும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை கிடைக்க வில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024க்கு முன்னதாக குடியேற்ற விவாதங்களுக்கு மத்தியில் "இன்னும் கிரீன் கார்டு கிடைக்கவில்லை" என்று Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறி இருந்தார்.

இந்நிலையில், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கிரீன் கார்டைப் பெறுவதற்காக மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பதாகவும், தானும் கிரீன் கார்டைப் பெற வேண்டுமா என்பது குறித்து தனது எக்ஸ் தளத்தில் தன்னைப் பின்தொடர்பவர்களிடம் யோசனைகள் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமெரிக்க அரசின் செயல் திறன் துறையின் தலைவரான எலான் மஸ்க் வெறுமனே "ஆம்" என்று ஒற்றை சொல்லில் பதிலளித்து உள்ளார்.

இந்த ஒற்றை வார்த்தை, உள்ளடக்கத்தில் மிகக்குறைந்ததாக இருந்தாலும், பயனர்களிடமிருந்து பிளாட்ஃபார்ம் முழுவதும் பலத்த எதிர்வினைகளைப் பெற்றது. அதற்கு அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஆதரவுக்கு நன்றி என்று சொல்லி சிவப்பு இதயம் மற்றும் கூப்பிய கைகள் ஆகிய இரண்டு EMOJI களைப் பதிவிட்டிருந்தார்.

அரவிந்த் ஸ்ரீனிவாஸுடன் மஸ்க் பேசுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, திறமையான நபர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் நுழைவதில் உள்ள சிரமம் குறித்து அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த சுழலில், அமெரிக்க குடியேற்ற அமைப்பு பற்றி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறிய கருத்துக்கு, நோபல் பரிசு பெற்ற ஒருவர் சட்டப்பூர்வமாக நுழைவதை விட, கொலைகாரன் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டுவது ஏன்? அரசு அதை சரி செய்யும் என்று மஸ்க் பதிலளித்து இருந்தார்.

கிரீன் கார்டு, என்பது அதிகாரப்பூர்வ அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதன் அடையாளமாகும். கிரீன் கார்டு என்பது ஒரு தனிநபருக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் உரிமையை வழங்கும் ஆவணமாகும். இது வெளிநாட்டினர் அமெரிக்காவில் காலவரையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.

அமெரிக்க குடியேற்றம் குறித்த புதிய விவாதத்தை, Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ், மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார்.

இதில் எலான் மஸ்கின் குடியுரிமைப் பயணமும் கவனிக்கத் தக்கது. 1971 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்த எலான் மஸ்க், 17 வயதில் கனடாவுக்குச் செல்வதற்கு முன், தனது தாயின் பரம்பரை மூலம் கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்றார்.

அமெரிக்கக் குடியுரிமைக்காக எலான் மஸ்க் பென்சில்வேனியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழில் முனைவோராக தன்னை உருவாக்கினார். தொடர்ந்து, 1995ம் ஆண்டில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இப்படியான வழிகளில் எலான் மஸ்க் அமெரிக்காவில் தனது இருப்பை உறுதிப்படுத்தினார்.

Zip2, PayPalமற்றும் இறுதியில் Tesla Motors மற்றும் SpaceX போன்ற நிறுவனங்களைத் தொடங்கியதால், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெற்றார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து அமெரிக்க குடியுரிமை வரையிலான எலான் மஸ்க்கின் பயணம், அமெரிக்காவில் வாய்ப்புகளைத் தேடும் பல புலம்பெயர்ந்த தொழில்முனைவோரின் ஆசைகளைப் பிரதிபலிக்கிறது.

எனவே தான், திறன்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கும் தகுதி அடிப்படையிலான குடியேற்றம் என்பதை எலான் மஸ்க் வலியுறுத்தி உள்ளார். மேலும், கிரீன் கார்டு செயல்முறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் எலான் மஸ்க் தொடர்ந்து கூறி வருகிறார்.

Advertisement
Tags :
Advertisement