அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைந்தால் வரிகள் குறையும் - கனடாவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்!
12:24 PM Jan 07, 2025 IST | Murugesan M
கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும் என்றும், 51வது மாநிலமாக ஆக வேண்டும் எனவும் டிரம்ப் கூறி வருகிறார். இந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்தார்.
Advertisement
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவிடம் இருந்து இனிமேல் மானியங்கள் உள்ளிட்டவை கனடாவுக்கு கிடைக்காது என்றும், இதை அறிந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார் எனவும் கூறியுள்ளார். ஒன்றுபட்டால் எவ்வளவு பெரிய தேசமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement