அமெரிக்காவில் ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயார் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
10:30 AM Jan 24, 2025 IST | Sivasubramanian P
அமெரிக்காவில் ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை மீண்டும் அழைத்து கொள்ள தயாராக உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
Advertisement
பின்னர் பேட்டியளித்த அவர், சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்குள் குடியேறுவதை இந்தியா உறுதியுடன் எதிர்க்கும் எனவும், அமெரிக்காவில் முறையான ஆவணமின்றி தங்கியுள்ள இந்தியர்களை மீண்டும் அழைத்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் கூறினார்.
அமெரிக்க விசா பெற 400 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது என்றும், இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பேசியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement