செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் முக்கிய கவனம் பெற்ற 3 வயது விவிஐபி - யார் இந்த மிரபிள் வான்ஸ்? - சிறப்பு தொகுப்பு!

07:00 PM Jan 21, 2025 IST | Sivasubramanian P

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜெ.டி.வான்ஸின் 3 வயது மகள் மிரபிள் வான்ஸ், உலக மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். தந்தையின் உறுதிமொழியேற்பு நிகழ்வில் தாய் உஷாவின் இடுப்பில் அமர்ந்தபடி, தனது விரல்களை உறுஞ்சிக்கொண்டிருந்த மிரபிள் வான்ஸின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், நேற்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடோலின் உள்ளரங்கில் பதவியேற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக அமெரிக்காவின் 50-வது துணை அதிபராக ஜெ.டி.வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். இவான் மற்றும் விவேக் ஆகிய இரு மகன்களும் அருகில் நிற்க, மனைவி உஷா வான்ஸ் பிடித்திருந்த பைபிளில் கைவைத்து, நீதிபதி முன்னிலையில் ஜெ.டி.வான்ஸ் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், உஷா வான்ஸின் இடுப்பில் அமர்ந்திருந்த வான்ஸ் தம்பதியரின் இளைய மகளான 2 வயதுடைய மிரபிள் வான்ஸ் உலக மக்களிடையே கவனம் பெற்றுள்ளார்.

Advertisement

பொறுப்புணர்வுடன் ஜெ.டி.வான்ஸ் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள, அவரை பெருமிதம் நிறைந்த புன்னகையுடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தார் மனைவி உஷா வான்ஸ். இதற்கிடையே மெஜந்தா கலரில் கோட், பேஜ் கலரில் ஸ்வெட்டர் என மிடுக்காக உடையணிந்து தாய் உஷாவின் இடுப்பில் தனது விரலை உறுஞ்சிக்கொண்டு கியூட்டாக அமர்ந்திருந்தார் இரண்டு வயதான மிரபிள்.

அவரின் இந்த CUTENESS OVERLOADED ரியாக்‌ஷன் பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், மிரபிளின் புகைப்படங்களையும், வீடியோவையும் வைரலாக்கி வரும் இணையவாசிகள், அவரது அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

மிரபிளின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இத்தனை வைரலாக காரணம் அவரது கியூட்னஸ் மட்டுமல்ல, மிரபிளின் கை விரல்களில் ஒட்டப்பட்டிருந்த வண்ணமயமான பேண்டெய்டுகளும்தான். ப்ளுயே (BLUEY) மற்றும் ஸ்கூபி-டூ (SCOOBY-DOO) ஆகிய பிரபல கார்டூன் காதாப்பாத்திரங்களின் படங்களுடன், மிரபிளின் விரல்களில் ஒட்டப்பட்டிருந்த அந்த பேண்டெய்டுகளின் பின்னணி குறித்து அறிய பலர் விரும்பினர்.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக வைரலாகி வரும் மிரபிளின் வீடியோ குறித்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, சிறுமி மிரபிளின் விரல்களில் எந்தவித வெட்டுக்களும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த பெண்டெய்டுகளை ஒட்டியே தீர வேண்டும் என மிரபிள் அடம்பிடித்திருக்கலாம். அதனால் மகளின் விருப்பத்தை பெற்றோரான வான்ஸ் தம்பதி நிறைவேற்றியிருக்கலாம் என்றவாறு பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர்.

Advertisement
Tags :
J.D. VanceJ.D. Vance videoVice President of the United StatesMirable Vanceus swearing ceremonyFEATUREDMAINamericaDonald Trump
Advertisement
Next Article