அமெரிக்க ஏஐ தொழில்நுட்ப துறை கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்! : டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு
01:41 PM Dec 23, 2024 IST | Murugesan M
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார் என்று ட்ரம்ப் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணன் ஏற்கனவே மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், யாஹு, பேஸ்புக், ஸ்நாப் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
Advertisement
வெள்ளை மாளிகை ஏஐ, கிரிப்டோ துறை தலைவராக டேவிட் சேக்ஸ் செயல்படுவார் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஏஐ துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன் என ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement