செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

09:12 AM Jan 04, 2025 IST | Murugesan M

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

Advertisement

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கியது. இவர் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோரின் ஆதரவாளராக அறியப்படுவர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்தனர். அப்போது துரைமுருகனும், கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களது ஆதரவாளர்கள் முன்னிலையில் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. வாய்மொழியில் கூறுவதை தவிர்த்து இ-மெயில் மூலமாக தகவல் அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து 6 மணி நேரத்திற்கு பிறகு இ-மெயில் அனுப்பப்படவே, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

அமைச்சர் துரைமுருகன் அறை மட்டும் பூட்டிய நிலையில் இருப்பதால் அதனை உடைக்க திட்டமிட்ட ED அதிகாரிகள் கார்பெண்டர் உதவியுடன் இரண்டு அறையின் கதவை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் 2ஆம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை பணம் என்னும் இயந்திரத்தோடு எஸ்பிஐ வங்கியின் 2 ஊழியர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு சென்றனர். அப்போது, பணம் என்னும் இயந்திரம் பழுதான நிலையில், புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் கணக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Tags :
crowbar.Enforcement DirectorateFEATUREDkathir anand house raidedKathir Anand MP.katpaddiMAINminister duraimuruganVellore mp
Advertisement
Next Article