செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

12:39 PM Jan 03, 2025 IST | Murugesan M

அமைச்சர் துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

துரைமுருகனும் அவரது மகன் எம்.பி. கதிர் ஆனந்த்தும் காட்பாடியில் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், அந்த வீட்டில், சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதேபோல, துரைமுருகனின் ஆதரவாளரான பள்ளிகுப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 11 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
ED RAIDEnforcement DirectorateFEATUREDKatpadiMAINminister duraimuruganMP Kathir Anandraid in katpadivellore
Advertisement
Next Article