For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் மோதல் வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

03:07 PM Nov 22, 2024 IST | Murugesan M
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் மோதல் வழக்கு ரத்து   சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலின்போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர். பெரிய கருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது பட்டமங்கலம் இடத்தில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Advertisement

இது தொடர்பாக கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகங்கை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு  நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement