அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு! : திருமாவளவன்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்க வேண்டுமென விசிக தலைவரும் சிதம்பரம் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.
மக்களவையில் இதுதொடர்பாக கேள்வி நேரத்தில் பேசிய அவர், அமைப்புசாரா தொழிலாளர்களின் பணியை வரைமுறைப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும், அவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியதுடன், மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயனடைந்த தொழிலாளர்களின் விவரத்தை வெளியிட வேண்டுமென வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, மத்திய அரசின் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவன வலைதளத்தில் நிகழாண்டில் மட்டும் 5 கோடி பேர் பதிவு செய்திருப்பதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் 46 கோடி பயனடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.