அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் அவமதித்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, கடந்த 10 ஆண்டுகளாக அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற பாஜக அரசு அயராது உழைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
நமது தற்போதைய நிலைக்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரே காரணம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவினரைப் பொறுத்தவரை அம்பேத்கரிடம் முழுமையான மரியாதையும், பயபக்தியும் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தீங்கிழைக்கும் பொய்களால் தாங்கள் பல வருடங்களாக செய்த தவறுகளையும், குறிப்பாக அம்பேத்கரை அவமதித்ததையும் மறைக்க முடியும் என எண்ணுவது மிகவும் தவறு எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
எஸ்.சி, எஸ்.டி சமூகங்களை அவமானப்படுத்த ஒரு குடும்பத்தின் தலைமையிலான கட்சி எப்படி எல்லாவிதமான தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.