அம்பேத்கர் பெயரில் காங்கிரஸ் அரசியல் செய்யக் கூடாது - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
சட்டமேதை அம்பேத்கர் பெயரில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யக் கூடாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதித்ததால், அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார். இதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் கட்சி அம்பேத்கரின் பெயரை எவ்வளவு காலம் தவறாகப் பயன்படுத்தப் போகிறது? என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக அம்பேத்கரை அவமதித்து வருவதாகவும் குற்றம் சாட்டிய கிரண் ரிஜிஜூ, பாஜகவினர் அம்பேத்கர் வழியில் நடப்பதாக தெரிவித்தனர். அம்பேத்கர் மிகவும் படித்தவர் என்பதால் அவரை காங்கிரசும், நேருவும் வெறுத்தார்கள் எனவும் அவர் கூறினார்.