அரசியலமைப்பை திருத்தி கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸ் - மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
11:22 AM Dec 18, 2024 IST | Murugesan M
அரசியலமைப்பை திருத்தி கருத்து சுதந்திரத்தை காங்கிரஸ் கட்சி நசுக்கியதாக மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தில் பேசிய அவர், கடந்த 1951-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் முதன்முறையாக திருத்தியதாக தெரிவித்தார்.
Advertisement
பொதுத் தேர்தல் வரை காத்திருக்க முடியாமல் அவசர கதியில் அரசியலமைப்பை காங்கிரஸ் திருத்தியதாக கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷா, சட்டப் பிரிவு 19ஏ-வை கொண்டு வந்து கருத்து சுதந்திரத்தை காங்கிரஸ் கட்சி நசுக்கியதாக விமர்சித்தார்.
பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்து அரசியலமைப்பில் 22 மாற்றங்களை செய்துள்ளதாகவும், காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்து 77 திருத்தங்களை மேற்கொண்டதாகவும் கூறினார்.
Advertisement
Advertisement