அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் திடீர் தீ விபத்து!
10:49 AM Dec 23, 2024 IST | Murugesan M
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவியது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில், மின்சார ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட தாய்மார்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினர்.
Advertisement
நோயாளியின் உதவியாளர்களின் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், உடனடியாக மின் ஊழியர்களை வரவழைத்து மின் ஒயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement