அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் !
06:50 PM Dec 15, 2024 IST | Murugesan M
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் சென்னை முகலிவாக்கத்தில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, முகலிவாக்கம் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement