அரையாண்டு தேர்வு விடுமுறை நிறைவு - பள்ளிகள் மீண்டும் திறப்பு!
தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து இன்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
அதன்படி, 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு திரும்பிய நிலையில், ஒன்றாம் முதல் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதனிடையே, பெஞ்ஜல் புயல் தாக்கத்தால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.