அவை சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்!
டெல்லியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் எல்.முருகன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கெளரவ் கோகாய், திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அனைத்துக் கட்சி கூட்டம் சுமூகமாக நடைபெற்றதாக தெரிவித்தார்.
மேலும், குளிர்கால கூட்டத்தொடரில் எந்தவொரு பிரச்னையையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறிய அவர், அவை நடவடிக்கை சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.