ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் - அண்ணாமலை புகழாரம்!
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் என தழிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூடடியுள்ளார்.
Advertisement
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, ஆயுதம் ஏந்திப் போராடிய, இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை, வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையைத் திரட்டி, அவர்களை வென்று, முதன் முதலில் ஆங்கிலேயேரை தோற்கடித்த வீராங்கனை என்ற பெருமை பெற்றவர். சிவகங்கை சீமையின் ராணியாக உயர்ந்த வேலுநாச்சியார் பன்மொழிப் புலமை பெற்றவர். பாரதப் பிரதமர் மோடியை மத்திய அரசின் சார்பாக, ஒரு ரயில் பொறியூர்திக்கு, ராணி வேலு நாச்சியார் பெயரைச் சூட்டிப் புகழ் சேர்த்திருக்கிறார்.
அறத்திற்கும் மறத்திற்கும் பெயர்பெற்ற வீரமங்கை வேலு நாச்சியார் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதேபோல் அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில் கூறியுள்ளதாவது : "மண்ணின் உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மாட்டோம் என்று, முதன்முதலாக உரத்த குரல் எழுப்பியவர்.