ஆங்கில புத்தாண்டு - சூரிய உதயத்தை கண்டு வழிபட்ட பொதுமக்கள்!
2025ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பொது மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
சென்னையில் புதிய ஆண்டின் முதல் சூரிய உதயத்தை மெரினா கடற்கரையில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்/
தூங்கா நகரம் என போற்றப்படும் மதுரையில், புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை ஏரளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர். அப்போது, ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதற்காக, அவர்கள் நள்ளிரவு முதலே கடும் பனியையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சூரிய உதயத்தை பார்த்தனர்.
மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண ஏராளமானோர் நதிக்கரையில் இருந்து கண்டு ரசித்தனர். அவர்கள் அனைவரும் சூரிய நமஸ்காரம் செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் புகழ் பெற்ற பூரியில், ஆன்மீக அன்பர்கள், சூரிய உதயத்தைக் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, ஜெகந்நாதர் கோயிலில் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.