ஆங்கில புத்தாண்டு - சென்னையில் உற்சாக கொண்டாட்டம்!
சென்னை மெரினா கடற்கரையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள், புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மேலும், சிறுவர்கள், பெரியவர்கள் வரை நடனமாடியும் புத்தாண்டை வரவேற்றனர். சிலர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது காவலர்களும் பொதுமக்களுடன் கலந்துகொண்டு புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால், மெரினா கடற்கரை முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். கடற்கரை சாலையில் பாதுகாப்பிற்காக பேரிகார்டுகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் கடற்கரையில் இறங்க முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். குடும்பத்துடனும், நண்பர்களுடனும் குவிந்த பொதுமக்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.